சேலம் : சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சேலம் :  சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி 
சேலம் அருகே பறக்கும் படையினர் நடத்திய சோதனையின் போது சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக சேலம் மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் தெற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட குமரகிரிப்பேட்டை பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து டிரைவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் வீரபாண்டி அருகே உள்ள செவந்தான்பட்டி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது? என்பது தொடர்பாக மோகன்ராஜியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story