தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் சேலம் மாணவன் சாதனை

தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் சேலம் மாணவன் சாதனை

தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் சேலத்தை சேர்ந்த மாணவன் இரண்டு பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளான். 

தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் சேலத்தை சேர்ந்த மாணவன் இரண்டு பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளான்.

சேலம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த ஒய்.சுரேஷ்பாபு- எஸ்.ஜெசினா தம்பதியின் 4 வயது மகன் சான்லி ஜோஸ்வின். இந்த சிறுவன் அழகாபுரம் இந்தியன் பப்ளிக் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான். ஸ்கேட்டிங் போட்டியில் ஆர்வம் கொண்ட சிறுவன், சேலம் மாவட்ட மற்றும் தமிழ்நாடு அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தான்.

தொடர்ந்து ஸ்பீடு ஸ்கேட்டிங் பெடரேசன் ஆப் இந்தியா என்ற அமைப்பு சார்பில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி கோவையில் நடந்தது. இதில் சிறுவன் சான்லி ஜோஸ்வின் 4 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் 1000 மீட்டர் தூரத்தில் தங்கமும், 400 மீட்டர் தூரத்தில் வெள்ளியும் வென்று சாதனை படைத்தான். இந்த சாதனை மாணவனை, பள்ளி முதல்வர் அருணா மகேசுவரி மற்றும் பள்ளி நிர்வாகிகள், தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் பெடரேசன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் முருகானந்தம், செயலாளர் கவுதம், ஸ்கேட்டிங் பயிற்சியாளர் புகழ் மற்றும் குடும்பத்தினர் ஜேம்ஸ் அன்பழகன், லீலா உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.

Tags

Next Story