சேலம் புறநகர் மாவட்ட தமாகா. சார்பில் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
மரியாதை செய்த காங்கிரசார்
சேலம் புறநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் காந்தி நினைவு தினத்தில் மாவட்ட தலைவர் மலர் தூவி மரியாதை செய்தார்.
சேலம் புறநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் அயோத்தியாப்பட்டணம் ரெயில்வே கேட் அருகில் காந்தி நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.
புறநகர் மாவட்ட த.மா.கா. தலைவர் வக்கீல் எஸ்.செல்வம் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
Next Story