சேலம் தளவாய்பட்டி அய்யனாரப்பன் கோவிலில் தெவத்திருவிழா

சேலம் தளவாய்பட்டி அய்யனாரப்பன் கோவிலில் தெவத்திருவிழா

ஊர்வலமாக வந்த பக்தர்கள்

சேலம் தளவாய்பட்டி அய்யனாரப்பன் கோவிலில் தெவத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சேலம் தளவாய்பட்டி ஏரிக்கரையில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கோவில் மூலஸ்தானத்துக்கு புனிதநீர் அபிஷேகம் செய்து தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்பிறகு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று இந்த கோவிலில் தெவத்திருவிழா நடந்தது. இதையொட்டி அய்யம்பெருமாம்பட்டி பழையூர் வீட்டு புடவைக்காரி அம்மன் கோவிலில் இருந்து பூஜை கூடைகளை சுமந்தபடி பக்தர்கள் ஊர்வலமாக சர்க்கார் கொல்லப்பட்டி வழியாக ஏரிக்கரை அய்யனாரப்பன் கோவிலை வந்தடைந்தனர். அங்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியில் கோவில் தர்மகர்த்தா ஜெயக்குமார், முன்னாள் தலைவர் வடிவேல், கட்டிட மேஸ்திரி அசோசியேஷன் தலைவர் மந்திரி, பட்டக்காரர் சுரேஷ் குமார் மற்றும் கோவில் நிர்வாகிகள் பெருமாள், சாமியார், குமரேசன், மணி, விஜி ஆனந்த், ராஜேந்திரன் மற்றும் கோவில் வரிதாரர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை ஆறுகரை கட்டு குலதெய்வம் பங்காளிகள் செய்து இருந்தனர்.

Tags

Next Story