சேலம் : பெட்டிக்கடையில் பணம் திருட்டு
போலீசார் விசாரணை
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பெட்டிக்கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). இவர் புதிய பஸ் நிலையம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறப்பதற்காக பிரபாகரன் வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையில் இருந்த ரூ.1,500 மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story