சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

திமுக செயற்குழு கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம்.செல்வகணபதி தெரிவித்துள்ளார்
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம்.செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) மதியம் 3 மணிக்கு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கலைஞர் மாளிகை வீரபாண்டியார் அரங்கில் நடைபெறுகிறது. அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் வருகிற 20-ந் தேதி தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சேலம் வருவது குறித்தும், 21-ந் தேதி நடைபெற உள்ள தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு குறித்தும், தமிழர் திருநாளான தமிழ் புத்தாண்டு குறித்து மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், ஆலோசிக்கப்பட உள்ளன. கூட்டத்தில் கட்சியின் அனைத்து அணி அமைப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story