சேலம் யில்வே கோட்டம் நடப்பாண்டில் 12.72 சதவீத வருவாய்

சேலம் யில்வே கோட்டம் நடப்பாண்டில் 12.72 சதவீத வருவாயை ஈட்டியுள்ளது

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் 75-ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா தேசிய கொடியை ஏற்றி, ரயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

இதில் சேலம் கோட்ட கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம், கோட்ட பாதுகாப்பு ஆணையர் சவுரவ் குமார் மற்றும் கோட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர், ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா பேசியதாவது, குடியரசு என்பது மக்களை அடிப்படையாககொண்டதாகும். அவர்களே உறுப்பினர்களும், தூண்களாகவும் விளங்குகின்றனர்.

நாம் ஒவ்வொருவரும் இந்திய குடியரசின் தூண்களாக உள்ளோம். அரசமைப்பு என்பது நாட்டின் ஆன்மா என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. நாட்டில் வாழும் வெவ்வேறு கலாசாரம் கொண்ட மக்கள் மற்றும் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும் சக்தியாக ரெயில்வே துறை விளங்குகிறது.

சேலம் ரெயில்வே கோட்டம் நடப்பாண்டில், 2023 டிசம்பர் வரை சுமார் 12.72 சதவீத வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தை விட அதிகமாகும். கோவை -பொள்ளாச்சி கூடுதலாக 2 ரெயில்வே சேவைகள் இயக்கப்பட்டுள்ளன.

கோவை-சென்னை மற்றும் கோவை-பெங்களூரு இடையில் வந்தே பாரத் ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு - திருநெல்வேலி இடையிலான ரெயில் சேவை செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ரெயில் நிலையத்தில் 2 மின்தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ரூ.33 கோடியில் 9 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. புகளூர், முகாசபரூர், குளித்தலை, புக்கிரவாரி ஆகிய ரயில்நிலையங்களில் நடைமேடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்

Tags

Next Story