கம்பைநல்லூர் ஆடுகள் சந்தையில் விற்பனை ஜோர்

கம்பைநல்லூர் ஆடுகள் சந்தையில் அளவு மற்றும் ரகத்தை குறித்து 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகின.
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பைநல்லூரில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக வாரச் சந்தை நடைபெறுகிறது. நேற்று 03 - 04 - 2024 நடைபெற்ற சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாய மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர்.ரகம் மற்றும் அளவைப் பொறுத்து ஆடுகள் 5, 000 ரூபாய் முதல் 10, 000 ரூபாயில் வரை ஆடுகள் விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 23 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story