நல்லம்பள்ளியில் ஆடுகள் விற்பனை அமோகம்

நல்லம்பள்ளி செவ்வாய் வாரச்சந்தையில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.
தர்மபுரி மாவட்டம் மற்றும் தர்மபுரி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் வார சந்தை நடைபெறுவது வழக்கம் வார சந்தை நடைபெறும் நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்யேக ஆட்டு சந்தை நடைபெற்று வருகிறது. இன்று காலை கூடிய ஆட்டுச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களிலும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வந்திருந்தனர் ஆடுகளின் அளவு மற்றும் ரகத்திற்கு தகுந்தவாறு போன்று 3,000 ரூபாய் முதல் 18,000 ரூபாயில் வரை ஆடுகள் விற்பனையானது மேலும் இன்று ஒரே நாளில் 50 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story