கம்பைநல்லூரில் பலாப்பழங்களின் விற்பனை ஜோர்
பலா விற்பனை
கம்பைநல்லூரில் ஏலகிரி மற்றும் ஜவ்வாது மலைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பலாப்பழங்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பைநல்லூர் பகுதியில் பலா விற்பனைக்கு குவிக்கப்பட் டுள்ளது. இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பலாப்பழங்கள் ஜவ்வாதுமலை, ஏலகிரி பகுதியில் இருந்து பலா பழங்களை மொத்தமாக வாங்கி வந்து பல்வேறு இடங்களில் குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர். பலாப்பழங்களின் அளவைப் பொறுத்து அளவை பொறுத்து ஒரு பழம் 100 முதல் 250 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவாக இருப்பதுடன் சுவையும் நன்றாக இருப்பதால் பொதுமக்களும் பலாவை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.
Next Story