பள்ளிபாளையத்தில் காதலர் தின பரிசு பொருட்கள் விற்பனை தீவிரம்

பள்ளிபாளையத்தில் காதலர் தின பரிசு பொருட்கள் விற்பனை தீவிரம்

காதலர் தின பரிசு பொருட்கள் 

காதலர் தினம் நெருங்குவதை ஒட்டி பரிசு விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது
பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலையில் செயல்படும் தனியார் பரிசுப் பொருள் அங்காடியில், காதலர் தினத்தை ஒட்டி ஏராளமான பரிசு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடையின் உரிமையாளர் சரவணன் கூறும் பொழுது ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்திற்கு சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் அனைத்து விதமான பரிசு பொருட்களையும் வாங்கி விற்பனை செய்து வருகிறோம். இந்த ஆண்டு ஒரு சில புதிய மாடல்களில் காதலர் தின பரிசு பொருட்கள் வாங்கி வந்து வைத்துள்ளோம்.இளைஞர், இளைஞிகள் ஆர்வமுடன் பரிசு பொருட்களை வாங்கி வருகின்றனர் என தெரிவித்தார்.

Tags

Next Story