சல்லிகாகொல்லை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் சல்லிக் கொல்லை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம்சல்லிக் கொல்லை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தலைச்சங்காடு கிராமத்தில் சல்லிக் கொல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது இதனை அடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக காவிரி கரையிலிருந்து மேள தாள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் புறப்பாடு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்திற்கு முன் சல்லிக்கொல்லை மாரியம்மன்,காத்தவராயன், கருப்பண்ண சாமி உள்ளிட்ட சாமிகள் எழுந்தருளச்செய்து தீக்குண்டத்தில் சக்தி கரகம் இறங்கியதை தொடர்ந்து மஞ்சள் உடை உடுத்தி விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அலகு காவடிகளுடன் பக்தர்கள் தீமிதித்த காட்சி காண்போரை பக்தி பரவசமடைய செய்தது. பின்னர் பெண்கள் மாவிளக்கு தீபமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
Next Story