சவரத் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சவரத் தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூரில் சவரத் தொழிலாளர்களின் ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்! திருப்பூரில் தமிழ்நாடு ஹேர் ட்ரெஸ்ஸஸ் யூனியன் சார்பில் சவரத் தொழிலாளர்களின் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட தலைவர். ஜீவமதி தலைமையில் குமரன் சிலை முன்பு நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கிராமப்புறங்களில் நடக்கும் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு உள்ளாகி வரும் மருத்துவ சமுதாய மக்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றும் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் செயல்படும் அனைத்து கோவில்களிலும் முடி எடுக்கும் தொழிலாளர்களையும், தவில்,நாதஸ்வர கலைஞர்களையும் நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசு சிறப்பு சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றி தர வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் எதிரான கண்டன முழச்சங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்டம் திருப்பூர் புறநகர் மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட சவரத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story