மக்கள் தலைவர் என்.வெங்கடாசலத்திற்கு வீரவணக்கம்

மக்கள் தலைவர் என்.வெங்கடாசலத்திற்கு வீரவணக்கம்
வெண்டையம்பட்டி அஞ்சலி
மக்கள் தலைவர் என்.வெங்கடாசலத்திற்கு வீரவணக்கம் செலுத்தி மக்கள் பொங்கல் வைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் பகுதியில், 50, 60 ஆண்டுகளுக்கு முன் தலித் கிறிஸ்தவர்கள் தை 3, 4 ஆகிய தேதிகளில் தான் பொங்கல் வைத்து வந்துள்ளனர். தை முதல் நாளில் பொங்கல் வைக்க ஆதிக்க சக்திகள் அனுமதி மறுத்தது.

தைப் பொங்கல் அனைவருக்குமானது. பொங்கல் தினத்தன்று ஏன் அடுத்த வீட்டில் பொங்கல் வாங்கி சாப்பிடவேண்டும். தை1ஆம் தேதியே பொங்கல் வைத்து, தானும் பொங்கல் சாப்பிட்டு, மனிதன் மனிதனாக வாழவேண்டும். யாருக்கும் யாரும் அடிமை இல்லை என சொல்லி அடிமைச் சங்கிலியை உடைத்த, உழைப்பாளி மக்களின் தலைவர் தியாகி என்.வெங்கடாசலத்திற்கு அவரது நினைவிடத்தில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி விட்டு, திங்கள்கிழமை தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சி.பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story