ஊத்தங்கரையில் விஜயகாந்த்க்கு விசிக சார்பில் வீரவணக்கம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அம்பேத்கர் சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் விடுதலை இயக்கம் மாநில துணை செயலாளர் ஜெயலட்சுமி தலைமையில் மறைந்த திரைப்பட நடிகர் மற்றும் தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்களின் இறுதி ஊர்வல வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் அசோகன், தொகுதி செயலாளர் சங்கத்தமிழ் சரவணன், ஒன்றிய துணை செயலாளர் சௌந்தர்ராஜன்,சுறா, ரஞ்சித், மகளிர் விடுதலை இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்கள்.

Tags

Next Story