சாமந்தி பூக்கள் விலை சரிவு விவசாயிகள் கவலை

சாமந்தி பூக்கள் விலை சரிவு விவசாயிகள் கவலை

சாமந்தி பூ விலை சரிவு 

பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் சாமந்திப்பூ சாகுபடிகள் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர் இந்த ஆண்டு சாமந்திப்பூ விளைச்சல் அமோகமாக இருப்பதால் வரத்து அதிகரிப்பின் காரணமாக விலை சரிந்துள்ளது இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாலை மற்றும் ஏரியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாமந்தி பூக்கள் இந்த ஆண்டு அதிகளவில் சாகுபடி செய்த நிலையில் விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக சாமந்தி பூக்களின் விலை சரிவை சந்தித்துள்ளது.

தர்மபுரி மற்றும் சேலம் பூ மார்க்கெட்டுகளில் சாமந்தி பூக்கள் கிலோ பத்து ரூபாய்க்கு கொள்முதல் விலையாக வியாபாரிகள் வாங்குவதாகவும் பெங்களூரு பூ மார்க்கெட்டில் 20 ரூபாய்க்கு பெற்றுக் கொள்வதாலும் விவசாயிகளுக்கு நடவு செய்த கூலி, பூ ஏற்றுமதி மற்றும் போக்குவரத்து செலவு உள்ளிட்ட அடிப்படை ஆதார விலை கூட கிடைக்காததால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக சாமந்தி பூக்கள் சாகுபடி செய்த விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பூக்கள் விளைச்சல் அதிகரித்து இருந்தும் விலை சரிவு காரணமாக விவசாயிகள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.

Tags

Next Story