தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

சமத்துவ பொங்கல்

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பனில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பங்கேற்றார்.
திருவாரூர் அருகே அம்மையப்பன் தனியார் கல்லூரியில் பொங்கல் பண்டிகை விழாவில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது மாணவ மாணவிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான சிலம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது . தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ ,மாணவிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story