காவல் துறை சார்பில் சமத்துவ பொங்கல்

காவல் துறை சார்பில் சமத்துவ பொங்கல்

சமத்துவ பொங்கல் 

விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

விழுப்புரம் ,காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத் தில் மாவட்ட காவல்துதுறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு தீபக் சிவாச் தலைமை தாங்கினார். விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி..திஷா மித்தல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட போலீசாருடன் புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபட்டு பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் போலீசார் மற்றும் காவலர் குடும்பத்தார்கள் மியூசிக்கல் சேர், கயிறு இழுக்கும் போட்டி மற்றும் உறியடி போட்டி ஆகியவை நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் உறியடித்தார். அப்போது அங்கிருந்த போலீசார் கைதட்டி அவரை உற்சாகபடுத்தினர். விழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோவிந்தராஜ், ஸ்ரீதரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுரேஷ், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் போலீசார் அனைவரும் பாரம்பரிய உடையணிந்தபடி கலந்து கொண்டனர்.

இதேபோல், விழுப்புரம் நகரகாவலர் குடியிருப்பில் நடந்த பொங்கல் விழாவில் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக்சிவாச் கலந்து கொண்டு பொங்கலிட்டு அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

Tags

Next Story