சமயபுரம் மாரியம்மனுக்கு பூத்தட்டு சுமந்து சென்ற பேரூராட்சி நிர்வாகம்

சமயபுரம் மாரியம்மனுக்கு  பூத்தட்டு சுமந்து சென்ற பேரூராட்சி நிர்வாகம்

பூத்தட்டுகளை சுமந்து ஊர்வலம் 

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பூத்தட்டுகளை சுமந்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பூக்கள் சாற்றப்பட்டது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் பூச்சொரிதல் விழா முக்கியமானதாகும்.. இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா கடந்த 10 ந் தேதி தொடங்கியது.. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இன்று 3-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்நிலையில் 3-வது வார பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ச.கண்ணணூர் பேரூராட்சி அலுவலகம் சார்பில் பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமையில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் பூத்தட்டுகளை கையிலும்,தோளிலும் சுமந்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு சாற்றினர்.

மேலும், 64 ஆம் ஆண்டாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சமயபுரம் கடைவீதியில் உள்ள ஆண்டவர் கோவிலில் அமைந்துள்ள விநாயகருக்கு அபிஷேகம் செய்து அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் படத்தை வைத்தும், யானையின் மீது பூக்களை வைத்தும் வாணவேடிக்கைகள் முழங்க சங்கத்தின் நிர்வாகிகள், குடும்பத்தினர், ச.கண்ணனூர் பூர்வீக குடிமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் பூக்களை சுமந்து கடைவீதி, தேரோடும் வீதி வழியாக கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்

Tags

Next Story