கருகி வரும் சம்பா நெற்பயிர்கள் - மேட்டூர் அணை திறக்கப்படுமா?

கருகி வரும் சம்பா நெற்பயிர்கள் -  மேட்டூர் அணை திறக்கப்படுமா?

கருகும் நெற்பயிர்கள்

தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் இன்றி கருகி வரும் சம்பா நெற்பயிர்களை காக்க மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதியில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கிடைக்காமல் பெரும்பாலான இடங்களில் சம்பா சாகுபடி நடைபெறாமல் விளைநிலங்கள் அனைத்தும் தரிசாக கிடக்கிறது. வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ள சேதம் ஏற்பட்ட நிலையிலும் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைம டையில் மழையின்றி ஏரி, குளங்கள் நிரம்பாமல் வறண்ட நிலையிலேயே உள்ளது. ஆனாலும் முதுகாடு, பெருமகளூர் பகுதிகளில் ஏரி பாசனம் மற்றும் நேரடி பாசன பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் நேரடி விதைப்பு செய்து இருந்தனர். அவை அனைத்தும் தற்போது கதிர்விடும் தருவாயில் உள்ளது. ஆனால் ஏரி யிலும் தண்ணீர் இல்லை. நேரடி பாசனத்திற்கு மேட்டூர் அணையும் திறக்கவில்லை. இதனால் தண்ணீர் இன்றி சம்பா நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தகவல் அறிந்ததும் சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப் போது தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனாலும் கதிர் வரும் தருவாயில் உள்ள சம்பா பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையை திறக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story