பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சம்பபந்தி விருந்து
குமரி மாவட்டம் பள்ளியாடியில் பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
குமரிமாவட்டம் சாமியார்மடம் அருகே பள்ளியாடியில் அமைந்துள்ளது பழைய பள்ளி அப்பா திருத்தலம். மத ஒற்று மைக்கு எடுத்து காட்டாக விளங்கும் இந்த திருத்தலத்தில் முப்பெரும் விழா நேற்று முன்தினம் சர்வ மத பிரார்த்தனையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற சமபந்தி விருந்தும் நடை பெற்றது. இந்தத் திருத்த லத்தில் தீப ஒளியினால் இறைவனை வழிபடுவது சிறப்பு அம்சமாகும்.
இத்திருத்தலத்தில் எண்ணெய், திரி, ஊது பத்தி, மெழுகுவர்த்தி போன்ற பொருள்களால் அனைத்து மதத்தினரும், அவரவர் முறைப்படி இறைவனை வழிபடு கின்றனர். இத்திருத்தலத் தில் லட்சக்கணக்கானகள் மதம், இனம், மக்கள் மொழி, வேறுபாடுயின்றி வழிபட்டு வருகின்றனர்.இங்கு நடைபெற்ற சர்வ மத பிரார்த்தனையில் அனைத்து மதத் தலைவர் கள் உட்பட ஏராளமான ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர்.சர்வ மத பிரார்த்த னையில் கலந்து கொண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இறைவனை வழிபட்டனர்.
அங்கு எண்ணெய் மற்றும் பழங் கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. சமபந்தி விருந்திற்காக பக்தர்கள் பழங்கள் அரிசி, காய்கறி கள், எண்ணெய் மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்களை வழங்கினர். இந்தப் பொருட்களை வைத்து 5000 கிலோ அரி சியை சமைத்து சமபந்தி விருந்து நேற்று வழங்கப்பட்டது. காலை முதல் மாலை வரை நடந்த சமபந்தியில் பல் லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்