சம்மந்தனூர் இரங்கம்மாள் நினைவு காது கேளாதோர் மாணவ,மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கல்

சம்மந்தனூர் இரங்கம்மாள் நினைவு காது கேளாதோர் மாணவ,மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கல்
X

உணவு வழங்கல் 

துணை சபாநாயகர் கு. பிச்சாண்டியின் பிறந்தநாள் முன்னிட்டு சம்மந்தனூர் இரங்கம்மாள் நினைவு காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

கீழ்பென்னாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,துணை சபாநாயகருமான கு. பிச்சாண்டியின் பிறந்தநாள் முன்னிட்டு நேற்று கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் ஏற்பாட்டின் பேரில், கீழ்பென்னாத்தூரையடுத்த சம்மந்தனூர் நினைவுகாது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி மற்றும் நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இ

ந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் பொது மேலாளர் ஜி.ராஜா தலைமை வகித்தார். கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன்,ஒன்றிய துணைசெயலாளர்கள் சிவக்குமார்,பரசுராமன், மாவட்ட பிரதிநிதிகள் குப்புசாமி,தேவேந்திரன், நகர செயலாளர்கள் கீழ்பென்னாத்தூர் அன்பு, வேட்டவலம் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமையாசிரியர் சி.ராஜா அனைவரையும் வரவேற்றார். இதில், கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சேகர்,பொறியாளர் அணி மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ், கிளைச் செயலாளர் அரிபாலன்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்துணை அமைப்பாளர் அவுல்தார், நகர இளைஞரணி அமைப்பாளர் வினோத் உட்பட பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள்கலந்து கொண்டனர்.

Tags

Next Story