நாமக்கல்லில் சனாதன தர்ம குழு ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்லில் சனாதன தர்ம குழு ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்லில் சனாதன தர்ம குழு ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்லில் சனாதன தர்ம குழு ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்லில் நடைபெற்ற சனாதன தர்ம குழு ஆலோசனைக் கூட்டத்தில், ஹிந்து தர்ம சக்தி தலைவர் டாக்டர் நித்ய சர்வானந்தா பேசினார். கூட்டத்துக்கு ஹிந்து தர்ம சக்தி தலைவர் டாக்டர் நித்ய சர்வானந்தா தலைமை வகித்து பேசும் போது, சனாதன தர்மம் என்பது, ரிஷிகளும் ஞானிகளும் உலகின் துவக்கமென்ன, படைப்பின் மூலமென்ன என்பதை நாம் எளிய முறையில் புரிந்துகொள்வதற்காக, உபதேசங்களின் மூலமாகவும் தத்துவங்களின் மூலமாகவும் எடுத்துக் கூறியுள்ளனர். சனாதன தர்மம் என்பது கடவுள் ஒருவரே அண்டங்களையும், பேரண்டங்களையும் உயிர்களாகவும், செடிகளாகவும், மரங்களாகவும், பூச்சிகளாகவும், விலங்குகளாகவும் படைத்துள்ளார். அந்தந்த உயிர்களுக்குள் அவர் வியாபித்து செயல்படுகிறார் என்பதுதான் சனாதன தர்மம்.

உங்களில் என்னைக் காண்கிறேன். என்னில் உங்களைக் காண்கிறேன். இந்தத் தத்துவத்தை உணர்த்துவதுதான் சனாதன தர்மம். எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் நான் வருவேன் என பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியுள்ளார் இதுவே சனாதனத்தில் மூலம் என அவர் பேசினார். கூட்டத்தில், மக்களிடம் சனாதன தர்மம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்த இயக்கத்தை மும்முரமாக செயல்படுத்துவது என்றும், இரு மாதங்களுக்கு ஒருமுறை சநாதன தர்ம குழு சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், நிர்வாகிகள் சிவராஜ், ஏகாம்பரம், சுப்பிரமணியம், சண்முகம், நந்தகோபால், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story