செம்மண் கடத்திய லாரி டிரைவர் கைது
கைது
வேலூர் மாவட்டம், கேவி குப்பம் அருகே அனுமதி பெறாமல் செம்மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகில் இருந்து பாலாற்று மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் மேற்பார்வையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருமாங்குப்பம் அருகே ஒரு டிப்பர் லாரியில் அனுமதி பெறாமல் செம்மண் ஏற்றிவந்ததைக் கண்டுபிடித்தனர். அதை போலீசார் டிப்பர் லாரியுடன் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெருமாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சம்பத்குமார் (41) என்பவரை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆதர்ஸ் கைது செய்தார்.அப்போது உடன் வந்த ரமேஷ் என்பவர் தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story