லாரியில் மணல் கடத்தியவர் கைது

லாரியில் மணல் கடத்தியவர்  கைது

லாரி பறிமுதல் 

திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி சட்டவிரோதமாக லாரியில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

உத்தமர்சீலி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி சட்ட விரோதமாக இரவில் லாரியில் மணல் கடத்துவதாக லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் மற்றும் போலீசார் உத்தமர்சீலி கொள்ளிடம் ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .அப்போது கொள்ளிடம் ஆற்றில் அனுமதி இன்றி சட்ட விரோதமாக சாக்குகளில் மணல் அள்ளி லாரியில் ஏற்றி கொண்டு இருந்தனர்.

அப்போது போலீசாரை கண்டதும் மணல் கடத்தியவர்கள் தப்பி ஓடி விட்டனர். மேலும் லாரி டிரைவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் சேலம் மாவட்டம், மேட்டூர், மேச்சேரி, மலிக்கொண்தம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் 38 வயதான சிவகுமார் எனதெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மணல், லாரி மற்றும் லாரி டிரைவர் சிவகுமார் ஆகியோரை டிஎஸ்பி அஜய் தங்கம் கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சிவகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் மணலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story