மணல் கடத்தல்: நான்கு பேர் கைது

மணல் கடத்தல்: நான்கு பேர் கைது

அத்துமீறி மணல் கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்த போளூர் போலீசார், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்

அத்துமீறி மணல் கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்த போளூர் போலீசார், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்

சேத்துப்பட்டு அடுத்த ஓதலவாடி செய்யாற்று படுகையில் அனுமதி இன்றி மணல் கடத்திய ஒரு மினி லாரி இரண்டு நான்கு சக்கர மாட்டு வண்டி ஆகியவற்றை போளூர் டிஎஸ்பி பறிமுதல் செய்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் மோதலவாடி ஊராட்சி செய்யாற்று படுகையில் இரவு பகல் பாராமல் மாட்டு வண்டிகளிலும் ,லாரிகளிலும், மணல் கடத்துவதாக போளூர் டிஎஸ்பி கோவிந்தராஜ்க்கு கிடைத்த தகவலின் படி, நேற்று டிஎஸ்பி கோவிந்தராஜ் இன்ஸ்பெக்டர் தமிழரசி சப் இன்ஸ்பெக்டர்கள் முருகன் ,பாஷ்யம் கொண்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஓதலவாடி செய்யாற்றில் மணல் கடத்திக் கொண்டிருந்த ஒரு மினி லாரியும் ,நான்கு சக்கர இரண்டு மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட தச்சூர் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் மகாலிங்கம் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய ஒதலவாடி கிராமத்தைச் சேர்ந்த அசோக், முனியப்பன் ஆகிய நான்கு பேரையும் கைது செயது, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story