திருமருகல் அருகே மணல் திருட்டு: இருவர் மீது வழக்கு பதிவு

திருமருகல் அருகே மணல் திருட்டு: இருவர் மீது வழக்கு பதிவு

கோப்பு படம் 

நாகை மாவட்டம் திருமருகல் அருகே ஆற்றுக்கரையோரம் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் திருமருகல் அருகே ஆற்றுக்கரையோரம் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் மீது வழக்கு பதிவு நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் போலீசரகத்திற்கு உட்பட்ட போலகம் -மானாம்பேட்டை சாலையில் உள்ள திருமலைராஜன் ஆற்றுக்கரையோரம் மணல் திருட்டு நடைபெறுவதாக திருமருகல் வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அவர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு இது தொடர்பாக திருக்கண்ணபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.தகவலின் பேரில் திருக்கண்ணபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.

போலீசார் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோ மற்றும் கால் யூனிட் ஆற்று மணலை பறிமுதல் செய்து திருக்கண்ணபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மணல் திருட்டில் ஈடுபட்டது போலகம் ஆற்றங்கரை தெரு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விக்னேஸ்வரன்,அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் விக்னேஷ் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags

Next Story