தர்மபுரி தர்காவில் சந்தனக்கூடு மற்றும் உருஸ் திருவிழா

தர்மபுரி சையத் சங்கால்ஷா காதர்வலி அவுலியா தர்காவில் சந்தனக்கூடு மற்றும் உருஸ் திருவிழா வான வேடிக்கைகளுடன் வெகு விமரிசையாக நடந்தது.
தர்மபுரி சையத் சங்கால்ஷா காதர்வலி அவுலியா தர்காவில் சந்தனகூடு மற்றும் உரூஸ் திருவிழா புனித நீர் வைபவமும் இரவு 7 மணியளவில் சந்தனகூடு ஊர்வலமும் நடந்தது. இதில் வானவேடிக்களுடன் மேளதாளங்கள் ஊர்வலத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இரவு 9 மணிக்கு மேல் சந்தனம் பூசுதல் மற்றும் பாத்தியா துவா நடைபெற்றது. முத்தவல்லி பாபு, கவுன்சிலர் முன்னா தலைமையில் தர்கா விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது கமிட்டியார்கள் மற்றும் மொஹல்லா முக்கியஸ்தர்களுடன் விழாவில் அனைத்து சமுகத்தினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

Tags

Next Story