பழையபாளையம் ஓலைப்பிடாரி செல்லாண்டி அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம்
சந்தன காப்பு அலங்காரம்
பழையபாளையம் ஓலைப்பிடாரி செல்லாண்டி அம்மனுக்கு 44 ம் நாள் மண்டல அபிஷேகம் மற்றும் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஏரிக்கரையில், எலுவம்பட்டியின் அருள்மிகு ஸ்ரீ ஓலைப்பிடாரி அம்மன் கோவிலில் 44 ம் நாள் மண்டல அபிஷேகம் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை அம்மனுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு அம்மனுக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் , மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கட்டளைதாரர்கள் சரவணன், கார்த்திக், கல்பனா, சத்யா,ரமாபிரபா, விஜியா,உமா, குமார், புவனேஸ்வரி,மாதேஷ்வரன் ஜெயகுமார் ஆகியோர் செய்து இருந்தனர். இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story