சக்தி கணபதிக்கு சந்தனக் காப்பு அலங்காரம்

நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை சக்தி கணபதி கோவிலில் ஆண்டு விழாவையொட்டி கணபதிக்கு சந்தன காப்பு அலங்காரம் மற்றும் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.

நாமக்கல் A.S.பேட்டை சக்தி கணபதி கோவில், 31 ஆண்டு விழாவை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து வந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு, 108 வலம்புரி சங்காபிஷேகம் வேள்வி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பிறகு சக்தி கணபதிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பகல் 12 மணிக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பிறகு மாலை விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது.இரவு மனிதன் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு தேவை வாட்சப் காலமா, வயல்வெளி காலமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. திருவண்ணாமலை எழிலரசி தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பேராசிரியர் அபு, ஐஸ்வர்யா, வடிவேல், சசிகலா ஆகியோர் பேசினார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் மற்றும் A.S.பேட்டை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story