திருப்பரங்குன்றம் மலை தர்காவில் சந்தனக்கூடு விழா கோலாகலம்
சந்தன கூடு
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்திருக்கும் சுல்தான் சிக்கந்தர் அவுலியா தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு மலைக்கு கீழே உள்ள பள்ளிவாசலில் இருந்து 3000 அடி மலை மீது உள்ள தர்கா வரையிலும் அனைத்து பாதைகளிலும் வண்ண விளக்குகளால் ஒளி மின்னும் வகையில் அலங்கரிக்கப்பட்டது .மேலும் தர்காவிற்கு கொண்டு செல்வதற்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்ட சந்தனக் கொடத்தை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மூன்று அடுக்கு சப்பரத்தில் வைத்து பெரிய ரத வீதிகளில் வளம் வந்து.
பின்னர் மலை மீது இருக்கும் தர்காவிற்கு சந்தன கொடம் எடுத்துச் செல்லப்பட்டு சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் வைத்து சிறப்பு துவாக்கள் செய்து தர்காவில் இருக்கும் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா மீது பூசப்பட்டு சிறப்பு துவாக்கள் செய்யப்பட்டது. மத நல்லிணக்கத்தை போட்டு விதமாக அனைத்து சமுதாய மக்களின் நலனுக்காகவும் ஒற்றுமைக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது முன்னதாக இந்த சந்தனக்கூடு விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வருகை தந்து இந்த சந்தனக்கூடு விழாவில் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர் .தர்காவிலிருந்து சிறப்பு சந்தனத்தை பெற்று சென்றனர்.