திருமங்கலத்தில் ஒரு கோடி மதிப்புள்ள சந்தன மரங்கள் கடத்தல்!

திருமங்கலத்தில் ஒரு கோடி மதிப்புள்ள சந்தன மரங்கள் கடத்தல்!

சந்தன மரங்கள் கடத்தல்

திருமங்கலம் அருகே ஒரு கோடி மதிப்புடைய சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தல் - போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகாவில் உள்ள பி . அம்மாபட்டி கிராமத்தில், அரசு மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெற்று வேல்சாமி என்பவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலப்பரப்பில் சந்தன மரம், தேக்கு மரம் இதர மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த முன்று தினங்களுக்கு முன்பு , அவரது தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் 30க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். இதன் மதிப்பு ரூபாய் ஒரு கோடி எனக் கூறப்படுகிறது. சந்தன மரங்களை கடத்தியவர்கள் , இயந்திர மெஷின் கொண்டு மரத்தை அறுத்தும் , வேரோடு மரங்களை சாய்த்தும், கோடாரியால் வெட்டி கூறு கூறாக வெட்டி கடத்தியதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் அறிந்த வேல்சாமி ,பேரையூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார் . புகாரின் பேரில் மர்ம நபர்களை போலீசார் மற்றும் வனத்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். இதே போன்று கடந்த 2018 ஆம் ஆண்டு இவரது தோட்டத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புடைய சந்தன மரங்களை மர்ம நபர்கள் கடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சந்தன மரக் கடத்தல் சம்பவத்தில் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா அல்லது அருகில் உள்ள யாராவது சந்தன மரத்தை கடத்தி உள்ளார்கள் என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.

Tags

Next Story