ஆவரங்காடு பகுதியில் சந்து பொங்கல் திருவிழா

X
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் சந்து பொங்கல் திருவிழா மற்றும் 7 சப்த கன்னிமார்கள் விசேஷ அலங்கார வழிபாடு நிகழ்வு நடைபெற்றது.
பள்ளிபாளையம், ஆவரங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் திருவிழா அடுத்த மாதத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த திருவிழாவுக்கு முன்னதாக கோவிலை சுற்றியுள்ள பொதுமக்கள் கூட்டாக சேர்ந்து தங்கள் பகுதி நோய் நொடி இல்லாமல் சிறப்பாக இருக்க வேண்டும் அனைத்து மக்களும் நலம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் சந்து பொங்கல் திருவிழாவை நடத்துவது ஐதீகம்.
நகரின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோல விசேஷ நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக ஆவரங்காடு காமராஜ் படிப்பகம் பகுதியில், நடைபெற்ற நிகழ்வில் காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்த குடம் எடுக்கப்பட்டு, விசேஷ பூஜைகள் நடைபெற்றது .இதில் ஏழு சப்த கன்னிமார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
Next Story
