சுப்பிரமணிய சாமி கோவிலில் கார்த்திகை தீப சங்காபிஷேக விழா
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கொட்டியாம்பூண்டி வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமி கோவிலில் கார்த்திகை தீப சங்காபி ஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, நேற்று முன்தினம் கணபதி யாகத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது.
நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடந்து, மகா தன்வந்திரி யாகம் நடந்தது, பின்னர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமிக்கு 108 சங்காபிஷேகம் நடந்து மலர்களால் அலங்கரித்து மகா தீபாரா தனை நடைபெற்றது, பூஜை மற்றும் வேள்விகளை வேப்பூர் தங்கதுரை தலைமையில் பாபு அய்யர் செய்தார்.
இதற்கான ஏற்பாடுகளை விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ், மாவட்ட பொருளா ளர் கருணாகரன், ஜோதிடர் கமலக்கண்ணன் மற்றும் கிராம முக் கிய பிரமுகர்கள் செய்திருந்தனர். இதில், கொட்டியாம்பூண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.