சங்ககிரியில் விவசாயிகள் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பில் ஆர்வம்
மருந்து தெளிக்கும் டிரோன்
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்தி சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.
அவ்வாறு சாகுபடி செய்துள்ள வயல்களில் கரும்பு பயிர்கள் செழித்து வளரும் நிலையில் மழை இல்லாமல் சுட்டெரிக்கும் வெயிலால் கரும்பு பயிரில் வெள்ளை கருப்பு நிற மாவு பூச்சிகள் திரவமாக கரும்பு பயிரின் குருத்தில் சூழ்ந்ததால் கரும்பு வளர்ச்சி குன்றி காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து ஆங்காங்கே வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வேளாண்மை துறை அதிகாரிகளின் ஆலோசனை படி வேகமாக பரவி வரும் திரவ பூச்சிகளை கட்டுபடுத்த விவசாயிகள் ட்ரோன் மூலம் கரும்பு வயல்களில் மருந்து தெளித்து வருகின்றனர்.