தண்ணீரின்றி கருகி மக்காச்சோளம் நாசம் விவசாயிகள் வேதனை !

தண்ணீரின்றி கருகி மக்காச்சோளம் நாசம் விவசாயிகள் வேதனை !

மக்காச்சோளம்

சங்ககிரி: அரசிராமணி பகுதியில் தண்ணீரின்றி மக்காச்சோளம் வயல்வெளிகளில் கருகி நாசம் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி அ.மேட்டுப்பாளையம் பகுதியில் மற்றும் மேட்டூர் கிழக்குக்கரை நீர் பாசன வாய்க்கால் உட்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் இந்த ஆண்டு விவசாயிகள் அதிக அளவில் மக்காசோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஆண்டு திறக்க வேண்டிய தண்ணீரை உரிய நேரத்தில் திறந்துவிட படாததாலும், பருவ மழை பொய்த்ததாலும் ஏரி, விவசாயக் கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதால் விவசாயிகள் பயிரிட்ட மக்காசோளம் உள்ளிட்ட விவசாய பயிர்களும் தண்ணீரின்றி விவசாய வயல்வெளிகளில் கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு கரை நீர்பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? என விவசாயிகள் ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Tags

Next Story