சங்ககிரி : திடீர் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

சங்ககிரி : திடீர் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று,இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த திடீர் கனமழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக 107 டிகிரிக்கு மேலாக வெப்பம் அதிகரித்து வெப்ப அலை வீசியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்ததால் சற்று குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மாலை வேளையில் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவூர், அரசிராமணி செட்டிப்பட்டி, ஒடச்சக்கரை, குள்ளம்பட்டி, காவேரிப்பட்டி, தண்ணீர்தாசனூர், வட்ராம்பாளையம், மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி ,மின்னல், காற்றுடன் கூடிய கனமழை பெய்தது இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது . இதனால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story