சங்ககிரியில் வறண்டு காணப்படும் நதி: தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

சங்ககிரியில் வறண்டு காணப்படும் நதி: தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்
X

சங்கிரியில் வறண்டுள்ள ஏரி 

சங்ககிரியில் வறண்ட நிலையில் காணப்படும் சரவாங்கா நதியால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலையில் தொடங்கும் சாபங்கா நதியானது ஓமலூர், எடப்பாடி, அரசராமணி வழியாக தேவூர் அருகே அண்ணமார் கோவில் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் கலக்கும் சர்பங்கா நதியானது விவசாயிகள் பொதுமக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில் போதிய மழையின்மை காரணமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதப்படும் சரபங்கா நதி சுட்டெரிக்கும் கோடை வெயிலின் காரணமாக இந்த சரபங்கா நதியை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயிகள் கரும்பு, மஞ்சள்,

வாழை என பல்வேறு வகையான விவசாய பயிர்களை பயிரிட்ட போதிலும் தற்போது வறண்ட நிலையில் காணப்படுவதால் இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடு, மாடுகளுக்கு கூட தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது .இதனால் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும்,

தற்போது வானம் பார்த்த பூமியாக மாறி உள்ளதால் மழையை நம்பி எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் கோடை மழை பெய்தால் மட்டுமே ஆடு, மாடுகளுக்கு கூட தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்த்து அப்பகுதி விவசாயிகள் காத்திருக்கின்றனர் .

Tags

Next Story