சங்ககிரி :பொதுமக்கள் திடீர் போராட்டம்

சங்ககிரி அருகே தனியார் கல்லூரியின் கழிவு நீர் நெடுஞ்சாலையில் விடப்படுவதை கண்டித்து பொதுமக்கள் கல்லூரியின் விடுதியின் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள கத்தேரி ஊராட்சிக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தனியார் கல்லூரியின் மாணவர்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்த விடுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சாக்கடை கால்வாய்க்கு செல்லாமல் நெடுஞ்சாலையின் செல்வதால் சாலை குண்டும் குழியும்மாகி வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் இந்த கழிவு நீரை பொதுமக்களின் மேல் தெளிப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் விஷ கிருமிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை கூறியதோடு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தங்கள் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால் பொதுமக்களுக்கு பெரும் தொற்று ஏற்படுவதற்குள் கழிவு நீரை வெளியேற்றி பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி விடுதி முன்பு திரண்டனர். இது குறித்து தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இந்த பேச்சுவார்த்தையில் ஒரு சில தினங்களில் தூய்மைப்படுத்தி கழிவுநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்ததின் பேரில் கல்லூரி விடுதியை முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story