சங்ககிரி விவேகானந்தா மகளிர் நிறுவனங்களில் கைத்தறித் துணி வகைகள் அரசு கண்காட்சி

சங்ககிரி விவேகானந்தா மகளிர் நிறுவனங்களில் கைத்தறித் துணி வகைகள் அரசு கண்காட்சி நடைபெற்றது.

சேலம் மாவட்டம் சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் அங்கமான விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் சார்பாக தமிழக அரசின் கைத்தறித்துறை கண்காட்சி நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கதர் மற்றும் கைத்தறி இரகங்களின் பாரம்பரியம் மற்றும் கலைநயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைத்தறி இரகங்கள் பிரபலபடுத்தப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழக அரசின் கைத்தறி கண்காட்சி விவேகானந்தா கலையரங்கத்தில் நடைபெற்றது.

பலநூறு வகையான பாரம்பரிய துணி வகைகளின் கண்காட்சியை விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி துவக்கிவைத்தார். நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ்சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, முதன்மை நிர்வாகிகள் பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் வரதராஜீ, திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநர் குமாரவேல், ஐ.க்யூ.ஏ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன், வேலைவாய்ப்புத் துறை அதிகாரி அருண்பிரசாத், கல்வியியல் கல்லூரி முதல்வர்கள் டாக்டர் ஆரோக்யசாமி, டாக்டர் அழகுசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக தமிழக அரசின் சேலம் மண்டலம் கதர் கிராமத் தொழில் வரிய உதவி இயக்குநர் சந்திரசேகர், திருச்செங்கோடு கைத்தறித்துறை உதவி இயக்குநர் பழனிகுமார், திருச்செங்கோடு உதவி அமலாக்க அலுவலர் ஜெயவேல்கணேசன், சேலம் மண்டல கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் காங்கேயவேல், மேலாளர் கோபி, சேலம் கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.

பாரம்பரிய கைத்தறித் தொழில்நுட்பம் சர்ந்த துணி வகைகளை பிரபலப்படுத்தும் வகையில் கைத்தறித் துறை சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட கைத்தறித்துறை இயக்குநர்கள் மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கோடை காலத்தில் கைத்தறித் துணிகள் நமது நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப மிகவும் உன்னதமானது என்பதை இயக்குநர்கள் எடுத்துக் கூறினர்.

நவீனமயமான இன்றைய இயந்திர உலகில் கைத்தறித் கைத்தொழிலை நம்பி வாழும் பல்லாயிரம் நெசவாளர்களின் வாழ்வாதரத்தை பெருக்கி நம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வழிவகைகளை இயக்குநர்கள் விளக்கினர். அதன் பிறகு பிரமாண்டமாக அமைந்த பாரம்பரிய கைத்தறிக் கண்காட்சியை சங்ககிரி விவேகாந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாகி பேராசிரியர் வரதராஜீ மற்றும் கைத்தறித்துறை இயக்குநர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.

கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான கைத்தறித் துணிவகைகளை விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரி, இரவீந்தரநாத் தாகூர் கல்வியியல் கல்லூரி, விஸ்வபாரதி கல்வியில் கல்லூரிகளில் பயிலும் 2,000க்கும் மேற்பட்ட மாணவிகள் பார்வையிட்டனர். புதுப்பாளையம் கைத்தறித்துணி வகைகள், பவானி ஜமுக்காள வகைகள், காஞ்சி, ஆரணி, சுங்கடி, இளம்பிள்ளை ரக பட்டுச் சேலை வகைகள், கிராம தொழில்களை மேம்படுத்தும் பனைப்பொருள் வகைகள், கொம்பு மலைத்தேன், ஜ.ஏ.எஸ் அதிகாரிகள் சகாயம் மற்றும் அபூர்வா ஆகியோரின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட பல்வேறு வகையான கைவினைப் பொருள்கள் ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றன.

‘கைத்தறித் தொழிலை ஊக்குவிப்போம்; கைத்தறி ஆடைகளை அணிவோம்’ என்று அனைத்து மாணவிகளும் உறுதிமொழி ஏற்றனர்.

மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் கைத்தறி கண்காட்சிப் பொருட்களை வாங்கிச் சென்றனர். சிறந்த முறையில் கண்காட்சி அரங்குகளை அமைத்த கைத்தறி நெசவாளர்கள், கைவினைப் பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் கைவினைப் பொருள் விழிப்புணர்வு கண்காட்சியில் பங்கேற்ற 2,000 மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதன்மை நிர்வாகி பேராசிரியர் வரதராஜீ, ஐ.க்யூ.ஏ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், கல்வியியல் கல்லூரி முதல்வர்கள் டாக்டர் ஆரோக்யசாமி, டாக்டர் அழகுசுந்தரம் ஆகியோர் வழங்கினர். பாரம்பரிய கைத்தறிக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கைத்தறித்துறை ஆய்வாளர் மகேஷ்பிரபு மற்றும் விவேகானந்தா டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story