சங்ககிரி விவேகாந்தா மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா

சங்ககிரி விவேகாந்தா மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா

சங்ககிரி விவேகாந்தா மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா

சங்ககிரி விவேகாந்தா மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா

சேலம் மாவட்டம் சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் அங்ஙகமான விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான மகாகவி பாரதியாரின் பிறந்த தின பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. விழாவிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ்சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு”என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதல் பரிசான ரூ. 5,000 ரொக்கத் தொகை மற்றும் நினைவுக் கேடயத்தை தமிழ்த்துறை இரண்டாமாண்டு மாணவி நந்தினி வென்றார். இரண்டாம் பரிசான ரூ. 3,000 ரொக்கத் தொகை மற்றும் நினைவுக் கேடயத்தை தமிழ்த்துறை மூன்றாம் ஆண்டு மாணவி மதிவாணி வென்றார். மூன்றாம் பரிசான ரூ. 2,000 ரொக்கத் தொகை மற்றும் நினைவுக் கேடயத்தை கணினி அறிவியல் துறை முதலாம் ஆண்டு மாணவி கனிஷ்கா வென்றார். இதையடுத்து லஞ்சஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.

Tags

Next Story