குப்பைகளால் சுகாதார சீர்கேடு!
சுகாதார சீர்கேடு
வந்தவாசியில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு சன்னதி தெரு பி.எஸ்.என்.எல். ஆபீஸ் அருகில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை சேகரிக்காமல் இருப்பதால், குப்பைகள் சாலையில் பறந்து செல்கின்றன. மேலும், கால்நடைகள் குப்பைகளை கிளறி விடுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story