மலை போல் குவிக்கப்பட்டுள்ள கழிவுகளால் சுகாதார சீர்கேடு
திண்டுக்கலில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் மலை போல் குவிக்கப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் அருகே என்.ஜி.ஓ. காலனியில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது.இங்கு நகரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது அன்றாட சமையலுக்கு தேவைப்படும் காய்கறிகளை வாங்க குவிந்தவண்ணம் உள்ளனர். இந்த உழவர்சந்தையில் மொத்தம் 60 க்கு மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. 60 க்கு மேற்பட்ட கடைகளிலும் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த நிலையில் இங்கு சேரக்கூடிய காய்கறி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள்,கேரி பேக் ஆகிவற்றை உழவர் சந்தை ஓரத்திலேயே மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை நேரங்களில் கொசுக்களின் பிறப்பிடமாகவும் உள்ளது. ஆகவே சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாக மலை போல் குவிக்கப்பட்டுள்ள கழிவுகளை அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.