தூய்மை காவலர்கள், மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு.

பெரம்பலூர் மாவட்டத்தில் தூய்மை காவலர்கள், மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர், ஆகிய நான்கு ஒன்றியங்களைச் சேர்ந்த அனைத்து ஊராட்சியில் பணி புரியும் தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர், தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவருடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜனவரி 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் இதனை தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், பெரம்பலூர் மாவட்டத்தில் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகின்றனர் இவர்களுக்கு கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அரசு அறிவித்த குறைந்தபட்ச மாத ஊதியமான 8 ஆயிரம் ரூபாயை வழங்காமல் வெரும் மூவாயிரம், நான்காயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த அரசு ஆணை இருந்தும் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு கவனத்திற்கு கொண்டு சென்று இவர்களுக்கு வழங்க வேண்டிய முழு தொகையும் வழங்க வேண்டும் என தெரிவித்தும், மேலும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கூடுதலாக, மாதம் ரூ20, ஆயிரம் வரை தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும், மேலும் அவர்களது பணிகளை நிரந்தர படுத்த வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு மாதம் ரூ2,000 ஓய்வு ஊதிய தொகை வழங்க வேண்டும், பணியில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கும் பொழுது பண பயன்களாக ரூ50,000 வழங்க வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் விரைவில் இதற்கான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், மேலும் இதனை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பதாகவும், மனுவைப் பெற்ற ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் இதற்கான ஆணை இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஊதியம் வழங்க பரிந்துரை செய்யப்படும் என தகவல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story