சிவகங்கையில் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
சிவகங்கை சந்தை பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை சந்தை பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கையில் உள்ள நேரு பஜார் மற்றும் தினசரி சந்தை பகுதியில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அப்புறப்படுத்தாததால் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடப்பதாகவும் ரோட்டிலும் குப்பைகள் அதிக அளவில் காணப்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருவதாகவும், அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் சிவகங்கை நகராட்சி சார்பாக குப்பை கொட்ட இடம் இல்லாததால் சிவகங்கை பேருந்து நிலையம் மற்றும் நகர் முழுவதும் குப்பைகள் அல்லாமல் ஆங்காங்கே கிடக்கின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்
Next Story