படாளம் லாரி பார்க்கிங் பகுதியில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

படாளம் லாரி பார்க்கிங் பகுதியில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
படாளம் லாரி பார்க்கிங் பகுதியில் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
படாளம் லாரி பார்க்கிங் பகுதியில் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அடுத்த படாளம் பகுதியில், கனரக வாகனங்கள் மற்றும் லோடு ஏற்றி செல்லும் லாரி ஓட்டுனர்கள் தங்கி ஓய்வெடுக்கும் வகையில், 'பார்க்கிங்' பகுதி அமைந்துள்ளது.

இங்கு போதியளவு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாததால், ஓட்டுனர்கள் அவதியடைந்து வருகின்றனர். குடிநீர் மற்றும் சமையல் செய்வதற்கு தேவையான தண்ணீரை, விலை கொடுத்து வாங்கி உபயோகப்படுத்தி வருகின்றனர். மேலும், கொளம்பாக்கம் பகுதி கழிவுநீர் மற்றும் மழைநீர் ஆகியவை, லாரி பார்க்கிங் பகுதியில் குளம்போல் தேங்கியுள்ளதால், அங்கு பன்றிகள் கூட்டமாக வந்து சேற்றை கிளறி விடுகின்றன.

இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் கொசுத் தொல்லை அதிகம் இருப்பதால், ஓய்வெடுக்க முடியவில்லை என, லாரி ஓட்டுனர்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும், சிமென்ட் கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய்களில், தற்போது பிளாஸ்டிக் குப்பை அடைத்துள்ளன.

மழைநீர் கால்வாயில் தேக்கம் அடைந்துள்ள பிளாஸ்டிக் குப்பையை முறையாக அகற்ற வேண்டும் என, லாரி ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story