சுடுகாட்டு பகுதியில் குப்பை எரிப்பதால் கோனேரிகுப்பத்தில் சுகாதார சீர்கேடு

சுடுகாட்டு பகுதியில் குப்பை எரிப்பதால் கோனேரிகுப்பத்தில் சுகாதார சீர்கேடு

 சுகாதார சீர்கேடு

கோனேரிகுப்பம் ஊராட்சியில், சேகரமாகும் குப்பை, கனகதுர்கை அம்மன் கோவில் அருகில் உள்ள சுடுகாட்டு பகுதியில் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சியில், சேகரமாகும் குப்பை, கனகதுர்கை அம்மன் கோவில் அருகில் உள்ள சுடுகாட்டு பகுதியில் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாலிதின், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பொருட்களை எரிப்பதால், அதில் இருந்து வெளியேறும் நச்சு புகையால், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. அருகில் உள்ள ஹட்கோ அவென்யூ, வி.ஐ.பி., நகர் கந்தன் எஸ்டேட், லஷ்மி நகரில் குடியிருப்போருக்கு சுவாச கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளதோடு, அப்பகுயில் நிலத்தடி நீரும் மாசடையும் சூழல் உள்ளது.

மேலும், அப்பகுதியினர் சுடுகாட்டிற்கு செல்வதற்கும் குப்பை குவியல் இடையூறாக உள்ளது. சுடுகாட்டு பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்றகோரி, ஹட்கோ அவென்யூ குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் ஊராட்சி நிர்வாகத்திற்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, கோனேரிகுப்பம் சுடுகாட்டு பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பையை முழுதும் அகற்றவும், மீண்டும் அப்பகுதியில் குப்பை கொட்டாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஹட்கோ அவென்யூ, வி.ஐ.பி., நகர் கந்தன் எஸ்டேட், லஷ்மி நகரினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story