துப்பரவு தொழிலாளி அடித்து கொலை
கொலை
திருநெல்வேலி துப்புரவு தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை முக்கூடல் அருகே உள்ள பாப்பாகுடியை சேர்ந்த துப்புரவு தொழிலாளி பால்ராஜ் கடந்த மாதம் நாகர்கோவிலில் உள்ள பேருந்து நிலையத்தில் சடலமாக கிடந்தார். முதலில் இவர் குடிபோதையில் தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாக கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் பிரேத பரிசோதனையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியானதை தொடர்ந்து போலீஸார் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story