தூய்மைப்பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சியில் தற்காலிக தூய்மைப்பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப முயற்சிப்பதாக செயல் அலுவலர் மீது தூய்மைப்பணியாளர்கள் குற்றம் சாட்டி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.பொன்னமராவதி பேரூராட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து வரும் தற்காலி தூய்மைப்பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 480 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வந்ததாகவும்.
ஆனால் தற்போது உள்ள செயல் அலுவலர் மு.செ.கணேசன் என்பர் தினசரி ஒரு தூய்மைப்பணியாளர்கள் 100 கிலோ மக்கும் குப்பை கொண்டுவர வேண்டும் என கட்டாயப்படுத்துவதாகவும்.முன்பு வழங்கிய 480 ஊதியத்தை நிறுத்தி 100 கிலோ மக்கும் குப்பை சேகரிக்க வேண்டும்.அவ்வாறு சேகரிக்கும் ஒரு நபருக்கு எழுபத்தி ஐந்து சதவீதம் ஊதியம் வழங்குவதாவும்.
அப்படி வழங்கும் ஊதியம் நாள் ஒன்றுக்கு 200 ரூபாய்க்கு குறைவாக தான் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.மேலும் ஒரு நபர் எப்படி நாள் ஒன்றுக்கு 100 கிலோ மக்கும் குப்பையை வாங்க முடியும் என்றும் தூய்மைப்பணியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன் தூய்மைப்பணியாளர்களுக்கு ரெக்கவரி என்கிற பெயரில் சம்பள பிடித்தம் செய்யப்படுவது, அரசு விடுமுறை நாட்களுக்கும் சம்பள பிடித்தம் செய்யப்படுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாவும் கூறப்படுகிறது.