பாலத்தை சுத்தப்படுத்திய தூய்மை பணியாளர்கள்
பள்ளிபாளையம் மேம்பாலத்தில் பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் ஆங்காங்கே வீசிய குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன.
தை மாத துவக்கத்தை அடுத்து, திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கு ,ஏராளமான வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பள்ளிபாளையம் வழியே பழனி மலைக்கு பாத யாத்திரையாக செல்கின்றனர் . இல்லையில் தொலை தூரங்களில் இருந்து வரும் பக்தர்கள் பள்ளி பாளையத்தின் பல்வேறு இடங்களில் தங்கி செல்கின்றனர் அவர்களுக்கான உணவு குடிநீர் உள்ளிட்டவை சமூக ஆர்வலர்களாலும் பக்தர்களாலும் வழங்கப்பட்டு வருகிறது .
கடந்த இரண்டு நாட்களாக ,தொடர்ந்து பாலத்தின் மேலே அதிகளவு வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வருதாலும், வாகனங்களில் இருந்து வீசப்படும் குப்பைகள் அதிகளவு பாலம் முழுவதும் நிரம்பி காணப்பட்டது .இதனை அடுத்து இதை தூய்மைப்படுத்தும் பணியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.